Page Loader
பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கவுள்ளார் நடிகர் விஜய்! 
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கவுள்ளார் நடிகர் விஜய்!

பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கவுள்ளார் நடிகர் விஜய்! 

எழுதியவர் Arul Jothe
Jun 07, 2023
04:25 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய், விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றும் பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்ப கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். உலக பட்டினி தினத்தன்று 234 தொகுதிகளில் இருக்கும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. தற்போது, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் சாதித்த மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஏற்கனவே மாவட்டந்தோறும் விஜய் ரசிகர் மன்றத்தினர், மாணவர்கள் பட்டியலை தயார் செய்து அனுப்பி இருந்தனர். தற்போது, வரும் 17ஆம் தேதி, விஜய் மாணவ மாணவிகளை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிக்கையும் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay 

மாணவ மாணவிகளை சந்திக்கவுள்ளார் நடிகர் விஜய்

தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தொகுதிகளிலும், முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளை நடிகர் விஜய் சந்திக்கவுள்ளார். தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படவுள்ளது. மாணவ மாணவியர்களை சந்திக்கும் இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும். மேலும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு, ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்க விஜய் திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.