Page Loader
நடிகர் விஜய் கடந்து வந்த 30 ஆண்டுகால திரைப்பயணம் 
நடிகர் விஜய் கடந்து வந்த 30 ஆண்டுகால திரைப்பயணம்

நடிகர் விஜய் கடந்து வந்த 30 ஆண்டுகால திரைப்பயணம் 

எழுதியவர் Nivetha P
Jun 22, 2023
03:51 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் அவர்களின் 49வது பிறந்தநாள் இன்று(ஜூன்.,22)கொண்டாடப்பட்டு வருகிறது. தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய், இந்த இடத்தினை அவ்வளவு எளிதாக பிடித்துவிடவில்லை. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு இயக்குனர் என்பதால் அவருக்கு சினிமா வாய்ப்பு எளிதில் கிடைத்துவிட்டது. எனினும், திரைத்துறையில் வெற்றிபெற அவர் கடுமையாக போராட வேண்டி இருந்தது. 1992ம்ஆண்டு நடிகர் விஜய் கதாநாயகனாக முதன்முதலில் நடித்த 'நாளைய தீர்ப்பு'படமானது வெளியானது. ஆனால், இத்திரைப்படம் பெரியளவில் தோல்வியடைந்தது. அதன்பிறகு, 'செந்தூரப்பாண்டி', 'தேவா'உள்ளிட்ட படங்களில் தனது தந்தை இயக்கத்திலேயே விஜய் நடித்தார். பின்னர், 1996ம்ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் 'பூவே உனக்காக' படம் விஜய்க்கு படவுலகில் ஒரு அந்தஸ்தினை ஏற்படுத்தி கொடுத்தது. இதனைத்தொடர்ந்து விஜய் காதல் மற்றும் குடும்பக்கதைகள் சார்ந்த படங்களில் நடிக்கத்துவங்கினார்.

விஜய் 

'கில்லி' படத்தின் ரூ.50 கோடி வசூல் புதிய உச்சத்திற்கு விஜய்யை கொண்டு சென்றது 

அதன்படி, 'லவ் டுடே', 'நேருக்கு நேர்', 'ஒன்ஸ் மோர்' உள்ளிட்ட படங்கள் அவருக்கு வெற்றியினையளித்தது. தொடர்ந்து, 1997ம்ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 'காதலுக்கு மரியாதை' படம் விஜய்யின் நடிப்பு திறமையினை வெளியே கொண்டு வந்தது. அதனையடுத்து அவர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடித்த 'குஷி' படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகி நட்சத்திர நாயகன் என்னும் அந்தஸ்தினை அவருக்கு அளித்தது. இதன் பிறகு அவர் திருமலை, பகவதி போன்ற படங்கள் மூலம் ஆக்சன் நாயகனாகவும் பெயர் பெற்றார். 'கில்லி' படத்தின் ரூ.50 கோடி வசூல் தயாரிப்பாளர்களுக்கு அவர்மீது பெரும் நம்பிக்கையினை ஏற்படுத்தியது. ரூ.200-300 கோடி வசூல் என்னும் புதிய உச்சத்தினை விஜய் அடைந்தாலும், அரசியல் ரீதியில் அவருக்கும் அவர் படத்திற்கும் அவ்வப்போது இடையூறு வருவது குறிப்பிடத்தக்கது.