
"அரசியலுக்கு வந்தால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன்": ரசிகர்மன்ற கூட்டத்தில் அறிவித்த விஜய்
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாகவே விஜய் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் 10, 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை கொடுத்து, அவர்களை கவுரவித்தார்.
அந்நிகழ்ச்சியில் தேர்தல்-வாக்குகள் குறித்து விஜய் பேசியது பெரும் பேசுப்பொருளாக மாறியது.
இந்நிலையில்,இன்று(ஜூலை.,11), சென்னை-பனையூரிலுள்ள தனது அலுவலகத்தில், விஜய், அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்தப்பின்னர் வெளியில் வந்த நிர்வாகிகள் சிலர்,"விஜய், அரசியலுக்கு வந்தால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என்றும், அரசியலில்தான் தனது முழுக்கவனமும் இருக்குமென்றும் கூறியுள்ளார். அவரது அரசியல் வருகைக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் நாங்கள் செய்துவிட்டோம். அவர் கைக்காட்டினால் போதும், அவரோடு அரசியலில் ஈடுபட்டு பயணத்தினை தொடருவோம்"என்று கூறியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியில் வந்தார் விஜய்
#Watch | மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையை முடித்து புறப்பட்ட நடிகர் விஜய்!#SunNews | #ActorVijay | #VijayMakkalIyakkam pic.twitter.com/NxYBXcAdlm
— Sun News (@sunnewstamil) July 11, 2023