மண்டாடி படத்திற்காக இன்சூரன்ஸ் போட்ட சூரி: ரஜினி ரசிகனாக இருந்து அண்ணாத்தே வரை நெகிழ்ச்சிப் பேட்டி
செய்தி முன்னோட்டம்
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனின் போது அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பதை உறுதிப்படுத்திய சூரி, தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். "தீபாவளிக்கு எடுத்த புது சட்டையை போட்டுக்கொண்டு தலைவரின் 'தளபதி' படம் பார்க்கச் சென்றேன். கூட்டத்தில் சட்டை கிழிந்துவிட்டதால் வீட்டுக்கு போக பயந்து ஊருக்குள்ளேயே சுற்றினேன். ரஜினி சாரைப் பார்த்துதான் எனது இயற்பெயரான 'ராமன்' என்பதை 'சூர்யா' என மாற்றினேன். பின்னர் சினிமாவுக்கு வந்த போது 'சூரி'யாக மாறினேன்" எனக்கூறியுள்ளார். மேலும், அண்ணாத்தே படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை அளித்த இயக்குநர் சிவாவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
ரிஸ்க்
மண்டாடி படத்திற்காக எடுத்த உயிரை பணயம் வைக்கும் ரிஸ்க்
வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தில் நடித்த அனுபவத்தைக் கொண்டு மண்டாடி எளிதாக இருக்கும் என நினைத்த சூரியின் கணிப்பு பொய்யானது என அந்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
"விடுதலை படத்திற்கு நான் போட்ட உழைப்பு வெறும் 10% தான். ஆனால் மண்டாடி படப்பிடிப்பின் போது கடலில் நிலவிய ஆபத்து காரணமாக, என் வாழ்க்கையிலேயே முதல்முறையாக எனக்கும், என் குடும்பத்திற்கும் இன்சூரன்ஸ் எடுத்தேன். ஷூட்டிங் செல்லும் முன் மனைவியிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறிவிட்டுத்தான் சென்றேன்" என தெரிவித்துள்ளார்.
விபத்து
கடலில் படகு கவிழ்ந்த விபத்து
படப்பிடிப்பு அனுபவத்தைக் குறிப்பிட்ட சூரி, தினமும் காலை 7.30 மணிக்குக் கடலுக்குச் சென்றால் மாலை தான் கரை திரும்புவோம் என்றார்.
படகில் இருந்து குதிக்கும் காட்சியைப் படமாக்கும் போது, எதிர்பாராதவிதமாகப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
"நீரில் குதித்துத் தப்பிய அனைவரும் கரையேறிய போது என்னை ஆளைக் காணவில்லை. தேடிப் பார்த்த போது 10 அடி தள்ளி நான் தனியாகத் மிதந்து கொண்டிருந்தேன்" எனத் தான் சந்தித்த உயிராபத்தை விவரித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Soori on #Mandaadi:
— CinemaXverse (@CinemaXverse) September 1, 2026
“Compared to the efforts I put into #Viduthalai, #Mandaadi was 10X tougher. Viduthalai had safety precautions, but for Mandaadi, I even took insurance for my entire family. Before every shoot, I gave life lessons to my wife and kids, not knowing whether I’d…