
"செய்தி" என்ற பெயரில் அப்பட்டமான பொய்களை பரப்புவதற்கு எல்லை உண்டு: நடிகர் பிரித்விராஜ் காட்டம்
செய்தி முன்னோட்டம்
மலையாள நடிகர் பிரித்விராஜ், தமிழ் திரைப்படங்களில் பலவற்றிலும் நடித்துள்ளார்.
மலையாள படவுலகில், நடிப்பு மட்டுமின்றி, தயாரிப்பு, இயக்கம் என பல துறைகளில் கால்பதித்து, வெற்றி கண்டவர் அவர்.
சமீபத்தில், மலையாள திரையுலகத்தவர் பலரின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமானவரி துறையினர் ஆகியோர் ரெய்டு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக ஊடகங்களில் பல வதந்திகள் பரவின.
அந்த செய்திகள்படி, நடிகர் பிருத்விராஜ் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பணம் பெற்றதாகவும், அதனால் தான் அமலாக்கத்துறை ரெய்டில் மாட்டியதாகவும் கூறப்பட்டது. இதை வன்மையாக கண்டித்து, பிரித்விராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "செய்தி" என்ற பெயரில் அப்பட்டமான பொய்களை பரப்புவதற்கு எல்லை உண்டு எனக்கூறினார்.
அதோடு, அந்த ஊடகத்தின் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்போவதாக அறிவித்தார்