LOADING...
தமிழக மின்வெட்டு சர்ச்சை பேச்சுக்கு நடிகர் மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்ட விளக்கம்
தவெக அரசுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று மகேந்திரன் கேட்டுக்கொண்டார்

தமிழக மின்வெட்டு சர்ச்சை பேச்சுக்கு நடிகர் மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்ட விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 17, 2026
12:06 pm

செய்தி முன்னோட்டம்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'மாஸ்டர்' நடிகர் மகேந்திரன், தமிழகத்தின் தற்போதைய மின்வெட்டுப் பிரச்சினை குறித்துத் தான் பேசிய சர்ச்சை கருத்துகளுக்கு இன்று அதிகாரப்பூர்வமாகத் தனது விளக்கத்தை அளித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தனது நேர்காணலின் குறுகிய வீடியோக்கள், தனது முழுமையான கருத்தைப் பிரதிபலிக்காமல், முற்றிலும் சூழலில் இருந்து மாற்றப்பட்டுத் தவறாகத் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ட்ரோல்

சோலார் பேனல் கருத்தும் சமூக வலைத்தள ட்ரோல்களும்

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தமிழக மின்வெட்டு குறித்துப் பேசிய மகேந்திரன், "அவர்கள் சோலார் சிஸ்டம் என்று ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள், அதை யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா?" என்று குறிப்பிட்டிருந்தார். சோலார் பேனல் என்பதற்குப் பதிலாக அவர் 'சோலார் சிஸ்டம்' என்று குறிப்பிட்ட வார்த்தையைப் பிடித்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்யத் தொடங்கினர். அதுபோக அவர் விஜய்க்கு ஆதரவாக பேச சில கருத்துகளும் அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தைக் கிளப்பியதைத் தொடர்ந்து அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

விளக்கம்

கேரளா விமான நிலைய முன்னுதாரணமும் ஜெயலலிதாவின் திட்டமும்

இது குறித்துப் பேசிய நடிகர் மகேந்திரன், "கடந்த 2015 ஆம் ஆண்டு கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம் முற்றிலும் சூரிய ஆற்றலால் (Solar Power) இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதைக் கண்டு நான் வியந்தேன்". "அதேபோல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் வீடுகளில் சோலார் பேனல்களைப் பொருத்தும் பசுமை வீடு திட்டத்தை அறிவித்திருந்தார். நமது தமிழ்நாட்டிலும் ஏன் அத்தகைய முழுமையான சூரிய சக்தி கட்டமைப்புகளை இன்னும் பெரிய அளவில் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணத்திலேயே நான் அவ்வாறு பேசினேன்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement

கோரிக்கை

முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவும் ஆறு மாத அவகாசக் கோரிக்கையும்

புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு மக்கள் குறைந்தது ஆறு மாத காலமாவது அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். "ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், மைக் முன்னாடி நின்று கேள்வி கேட்பதால் மட்டுமே மின்சாரம் உடனடியாக வந்துவிடாது. மின்சாரப் பிரச்சினையை அரசியல் ஆக்காமல், புதிய அரசுக்குச் சீரமைக்கும் நேரத்தைக் கொடுக்க வேண்டும் என்ற முதலமைச்சர் விஜய்யின் கருத்தையே நானும் வழிமொழிந்தேன். எனது வார்த்தைகள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் நான் மனமார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறி மாஸ்டர் மகேந்திரன் இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement