நடிகர் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது
செய்தி முன்னோட்டம்
நவம்பர் மாதம் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்களுள் ஒன்று தான் கார்த்தி நடித்துள்ள 'ஜப்பான்'.
இது நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படம்.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
திருச்சியில் நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தை தழுவி படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இப்படத்தின் டீசர் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'டச்சிங் டச்சிங்' லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
லிரிக்கல் வீடியோ பாடல்
#TouchingTouching from #Japan! Let’s turn up the volume 🔊.
— SR Prabu (@prabhu_sr) October 23, 2023
A @gvprakash Musical 🎵 https://t.co/BJtwRP1sMQ
🎤 : @karthi_offl, @Indravathichauh
✍🏽: @Arunrajakamaraj/ #BhaskaraBatla
🕺🏽: @AlwaysJani @ItsAnuEmmanuel @vagaiyaar @ksravikumardir #Sunil @vijaymilton @sanalaman…