தமிழக தேர்தல் 2026: நடிகை அக்ஷயா ஹரிஹரன் வாக்கு முறைகேடு புகார்; வேறொருவர் வாக்களித்ததால் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, நடிகை அக்ஷயா ஹரிஹரன் தனது வாக்கு ஏற்கனவே பதிவாகிவிட்டதாகக் கூறிப் புகார் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி தொகுதியைச் சேர்ந்த அவர், அடையாறு வாக்குச்சாவடிக்குச் சென்றபோது, தனது பெயரில் வேறொரு பெண் வாக்களித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது பெயரில் வாக்குச்சாவடி ஆவணங்களில் வேறொரு பெண்ணின் புகைப்படம் இருப்பதை அக்ஷயா கண்டறிந்தார். அந்தப் பெண்ணின் வயது மற்றும் பிற விவரங்கள் சரியாக இருந்த போதிலும், புகைப்படம் மட்டும் வேறாக இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "ஆவணங்கள் சரியாக இருந்தும், புகைப்படம் மாறியிருப்பதை அதிகாரிகள் ஏன் கவனிக்கவில்லை? எப்படி வேறொருவர் என் பெயரில் வாக்களிக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
@ECISVEEP please spread the news and cast your ballot tender vote if this is the case and cancel the fake vote with a complaint pic.twitter.com/eu5xkYB1k9
— akshaya hariharan (@akshaya__31) April 23, 2026
மாற்று ஏற்பாடு
டெண்டர் வாக்கு முறை
வாக்குச்சாவடி அதிகாரிகள் அவருக்குப் பதில் அளிக்காத நிலையில், அவர் டெண்டர் வாக்கு அல்லது சவால் வாக்கு முறையைப் பயன்படுத்தி வாக்களித்தார். இருப்பினும், மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்காமல், ஒரு காகிதத்தில் வாக்கை எழுதி உறையிலிட்டது திருப்தியாக இல்லை என்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அருகில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் முறையான புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற தமிழகத் தேர்தலில், பல திரைப்பிரபலங்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடந்தாலும், தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.