
மீண்டும் பைக் ரைடு - வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் அல்டிமேட் ஸ்டார் நடிகர் அஜித்.
இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது, அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது.
கடந்த ஜூன் மாதமே இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவிருந்த நிலையில், சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்கவில்லை என்று தெரிகிறது.
இதனிடையே நடிகர் அஜித் வெளிநாடுகளுக்கு பைக் ரைடு சென்று அண்மையில் திரும்பினார்.
இந்நிலையில் இவர் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்க துவங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் அஜித் தனது பைக்கில் நார்வே, டென்மார்க், ஜெர்மனி, போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த அஜித்
#CinemaUpdate | வெளிநாட்டுக்கு பறந்த அஜித் - மீண்டும் பைக் பயணம்!#SunNews | #AjithKumar | #AjithKumarWorldTour pic.twitter.com/S9iqdNnt8h
— Sun News (@sunnewstamil) August 2, 2023