நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ் எப்போது?
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில், பிளெஸி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆடுஜீவிதம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் அமலா பால் நாயகியாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இப்படம், கடந்த மாதம் திரைக்கு வந்தது. நிஜக்கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் திரைக்கதை, பிரித்விராஜின் அபாரமான நடிப்பு, அற்புதமான ஒளிப்பதிவு என பலவும் நேர்மறை விமர்சனங்களை பெற்றது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸிற்காக பலரும் காத்திருக்கும் நேரத்தில் தற்போது அது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் மே மாதம் 26-ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைம்-இல் வெளியாகவுள்ளது.
Twitter Post
ஆடு ஜீவிதம் ஓடிடி ரிலீஸ்.. எப்போ, எதிர் பார்க்கலாம் தெரியுமா?.. ரசிகர்கள் வெயிட்டிங் https://t.co/ZdUHTl4P8L#Aadujeevitham #OTT #MovieOTT #ஆடுஜீவிதம்— Tamil Filmibeat (@FilmibeatTa) April 7, 2024