Page Loader
RRR 2: RRR திரைப்படத்தின் சீக்குவல் வெளியாகவுள்ளதாக தகவல் 
விரைவில் ர்ர்ர் விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

RRR 2: RRR திரைப்படத்தின் சீக்குவல் வெளியாகவுள்ளதாக தகவல் 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 10, 2023
05:39 pm

செய்தி முன்னோட்டம்

சென்ற ஆண்டு பான்-இந்தியா படமாக வெளியான திரைப்படம் 'RRR'. ராஜமௌலி இயக்கத்தில், தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம், உலக அளவில் பல விருதுகளை குவித்தது. அதுமட்டுமின்றி, ஆஸ்கார் விருதுகளின் இறுதி பட்டியலிலும், பல விருதுகளின் கீழ் தேர்வாகி, இறுதியாக சிறந்த பாடல் விருதை தட்டி சென்றது. சுதந்திரத்திற்கு முன் இருந்த காலகட்டத்தில் அமைந்த இந்த திரைப்படம் குறித்த சுவாரசியமான விஷயம் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் முன்கதை(sequel) ஒன்றை வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. உலகத்தரத்தில் எடுக்கப்படவுள்ள இத்திரைப்படத்தை இயக்கப்போவது ராஜமௌலியாக இருக்கக்கூடும், அல்லது அவரின் மேற்பார்வையில் வேறு யாராவது எடுப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

விரைவில் RRR 2?