
அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்: திரைப்பட சர்ச்சைக்கு மத்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்
செய்தி முன்னோட்டம்
'தி கேரளா ஸ்டோரி' என்ற சர்ச்சைக்குரிய திரைப்படம் வெளியாகும் தருணத்தில் மதக்கலவரங்கள் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக உளவு துறை எச்சரித்திருக்கும் வேளையில், மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான், ட்விட்டரில் ஒரு விடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், மசூதிக்குள் ஒரு இந்து திருமணம் நடைபெறுவது போல காட்சிகள் உள்ளன.
'தி கேரளா ஸ்டோரி' என்ற ஹிந்தி திரைப்படத்தை, சுதிப்தோ சென் என்பவர் இயக்கியுள்ளார். அந்த படத்தின் கரு, கேரளா மாநிலத்தில் இருந்து சுமார் 32,000 பெண்கள் காணாமல் போனதாகவும், அவர்கள் அனைவரும் மூளை சலவை செய்யப்பட்டு, இஸ்லாம் மதத்திற்கு மாறி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
படத்தின் தயாரிப்பாளர் இது ஒரு உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
மதநல்லிணக்கத்தை பற்றி ஏ.ஆர். ரஹ்மானின் ட்வீட்
Bravo 🙌🏽 love for humanity has to be unconditional and healing ❤️🩹 https://t.co/X9xYVMxyiF
— A.R.Rahman (@arrahman) May 4, 2023