NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இரண்டு நாட்களில் ரூ.6.8 கோடி வசூல் செய்த 'ஸ்டார்' திரைப்படம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இரண்டு நாட்களில் ரூ.6.8 கோடி வசூல் செய்த 'ஸ்டார்' திரைப்படம் 

    இரண்டு நாட்களில் ரூ.6.8 கோடி வசூல் செய்த 'ஸ்டார்' திரைப்படம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 12, 2024
    05:01 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் கவின் நடிப்பில் கடந்த மே 10ஆம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குநர் இளன் இயக்கிய இத்திரைப்படத்தில் கவின், அதிதி போஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    நடிகர் ஆவதற்கு ஒருவர் எவ்வளவு கஷடத்தை தாண்டி வர வேண்டி இருக்கும் என்பதை இப்படம் அழகாக எடுத்து காட்டுகிறது.

    இரண்டாவது நாளில், ஸ்டார் அதன் தொடக்க நாளில் ஈட்டிய வசூலை இரட்டிப்பாக்கியுள்ளது.

    இப்படம் 2வது நாளில் தோராயமாக ரூ 4 கோடி வசூல் செய்துள்ளது. எனவே, இதன் மொத்த வசூல் ரூ 6.8 கோடியாக உயர்ந்துள்ளது.

    தமிழ் திரைப்படம் 

    ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது 'ஸ்டார்' 

    இப்படத்திற்கு இளன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

    லால், கீதா கைலாசம், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தனது இசையமைப்பால் ரசிகர்களின் மனதை ஆட்டி படைக்கும் யுவன் ஷங்கர் ராஜா, இப்படத்தின் பின்னணி இசை மற்றும் அசல் ஒலிப்பதிவுகளை அமைத்துள்ளார்.

    இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன், தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

    பலர் இப்படத்தை புகழ்ந்து வருவதால் வரும் நாட்களில் மேலும் கோடிகளில் பணத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    வெப்பத்தைத் தணிக்க வருகிறது மழை; எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை
    கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்படுமா? "No" சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா
    டார்க் பேட்டர்ன்களை சுய தணிக்கை மூலம் நீக்க இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் அமைச்சகம் உத்தரவு ஆன்லைன் வணிகம்
    கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் யூரிப் டர்பே மீது துப்பாக்கிச் சூடு; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி துப்பாக்கி சூடு

    தமிழ் திரைப்படம்

    கைதி-2 திரைப்படத்திற்கு முன் வெளியாகவுள்ள 10 நிமிட குறும்படம்- நடிகர் நரேன் தகவல்  லோகேஷ் கனகராஜ்
    'கண்ணகி' முதல் 'பைட் கிளப்' வரை- தமிழில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு திரைப்பட வெளியீடு
    யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது யோகி பாபு
    அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது ட்ரைலர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025