அடுத்த செய்திக் கட்டுரை

'மிர்ச்சி' செந்திலுடன் ஜோடியாக நடிக்கும் ஜோதிகா.. ஆனால் திரைப்படத்தில் அல்ல
எழுதியவர்
Venkatalakshmi V
Sep 19, 2023
05:16 pm
செய்தி முன்னோட்டம்
'மிர்ச்சி' செந்தில், சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலம். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்த செந்தில், அவ்வப்போது திரைப்படங்களிலும் தலைகாட்டி வந்தார். தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரில் நடித்து வருகிறார், 'மிர்ச்சி' செந்தில். இந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் நடிகை ஜோதிகாவுடன் ஜோடியாக நடிப்பது போன்ற புகைப்படங்களை இட்டுள்ளார். ஒரு தனியார் பிஸ்கட் நிறுவனத்திற்கான விளம்பரத்திற்கு இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். அந்த விளம்பர ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ள மிர்ச்சி செந்தில், மற்றுமொரு சுவாரஸ்ய தகவலையும் பகிர்ந்துள்ளார். இந்த விளம்பரத்தை இயக்கியது நடிகரும் இயக்குனருமான '5-ஸ்டார்' கிருஷ்ணா.