விஸ்வரூபம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு; அதே பாணியில் வெளியான தமிழ் படங்களின் பட்டியல்
'விஸ்வரூபம்'. கமல்ஹாசன் இயக்கத்தில், பல சர்ச்சைகளை கடந்து வெளியான இந்த படம், பெரும் வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே. ஸ்பை திரில்லர் பாணியில் வெளியான இந்த படத்தில், கமல்ஹாசன், ரா ஏஜெண்டாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி, இந்த மாதத்துடன் 10 ஆண்டுகள் நிறைவடையும் இவ்வேளையில், இந்த படத்தை உதாரணமாக கொண்டு வெளியான மற்ற ஸ்பை-திரில்லர் தமிழ்படங்களின் பட்டியல் இதோ: இப்படை வெல்லும்: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், கௌரவ் நாராயணன் இயக்கிய இந்த படம், கதையிலும், இசையிலும் விஸ்வரூபம் படத்தை ஒத்து இருந்தது. மேலும் இந்த படத்தில், மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி, சூரி, ஆர்.கே.சுரேஷ் மற்றும் ராதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
சீக்ரெட் ஏஜெண்டாக விஷ்ணு விஷால் நடித்த F.I.R
வேதாளம்: 'சிறுத்தை' சிவா இயக்கிய இந்த படத்தில், அஜித்குமார் நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரத்திற்கு இரண்டு shades இருந்தன. 'விஸ்வரூபம்' படத்தில் கமலின் கதாபாத்திரம் உருமாற்றக் காட்சியை அடிப்படையாக கொண்டு, இந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்தார் இயக்குனர் என கூறப்பட்டது. விவேகம்: இதுவும் ஒரு ஸ்பை-திரில்லர் வகையை சேர்ந்தது. இந்த திரைப்படம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டாலும், படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்தாததால், படம் வெற்றியடையவில்லை. FIR: விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இந்த FIR திரைப்படத்தை, மனு ஆனந்த் இயக்கி இருந்தார். தீவிரவாதத்தை பற்றிய இந்த படத்தில், விஷ்ணு விஷால் சீக்ரெட் ஏஜென்டாக நடித்திருந்தது, 'விஸ்வரூபம்' படத்தின் இன்ஸ்பிரேஷன் போல் தெரிகிறது. படத்தில் விஷ்ணு விஷாலுடன், மஞ்சிமா மோகன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.