Loading...
அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிர்ச்சி அறிக்கை! புனே, குஜராத், சென்னையைக் குறிவைத்து அமெரிக்கா வெளியிட்ட தகவல்
புனே, குஜராத், சென்னையைக் குறிவைத்து அமெரிக்கா வெளியிட்ட தகவல்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிர்ச்சி அறிக்கை! புனே, குஜராத், சென்னையைக் குறிவைத்து அமெரிக்கா வெளியிட்ட தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 14, 2026
02:36 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்ட தி கிரேட் டிரான்ஸ்ஷிப்மென்ட் ஸ்கேம் என்ற வர்த்தக அறிக்கையில், இந்தியாவின் புனே, குஜராத் மற்றும் சென்னை ஆகிய உற்பத்தி மையங்களை அழகற்ற இரட்டை நகரங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த சொல் நகரங்களின் அழகைக் குறைத்து மதிப்பிடுவதற்காகக் கூறப்பட்டதல்ல. அமெரிக்காவின் சின்சினாட்டி, டேட்டன் மற்றும் கொலம்பஸ் ஆகிய தொழில் நகரங்களில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் பம்புகள் மற்றும் கம்ப்ரசர்களுக்குப் போட்டியாக இந்தியாவின் இந்தத் தொழில்துறை மையங்கள் வேகமாக வளர்ந்து வருவதையே அமெரிக்காவின் இந்த வர்த்தக ஒப்பீடு நேரடியாக சுட்டிக்காட்டுகிறது.

சீனா

சீனப் பொருட்களும் வர்த்தகத் திசைதிருப்பலும்

சீனாவில் இருந்து நேரடியாக அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மிக அதிக அளவில் வர்த்தக வரிகள் விதிக்கப்படுகின்றன.

இதனைத் தவிர்ப்பதற்காக, பல சீன நிறுவனங்கள் தங்களது பொருட்களை இந்தியா போன்ற வரி குறைவான மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பி, அங்கு சிறிய அளவிலான மாற்றங்கள் செய்து மேட் இன் இந்தியா முத்திரையுடன் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதைத் தடுக்கும் நோக்கில், சந்தேகத்திற்குரிய வர்த்தக வழிகள் மற்றும் நாடுகளைக் கண்டறிந்து கண்காணிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் தற்போது மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது.

இத்தகைய நிழல் வர்த்தக நெட்வொர்க் மூலமாக அமெரிக்காவிற்கு பல பில்லியன் டாலர்கள் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

இந்தியா

அமெரிக்கக் கண்காணிப்புப் பட்டியலில் இந்தியா

கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், மெக்சிகோ மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுடன் சேர்த்து இந்தியாவையும் அமெரிக்கா முதல் நிலை கண்காணிப்புப் பட்டியலில் வைத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தித் திறன் மற்றும் சீன விநியோகச் சங்கிலியுடன் இந்தியா கொண்டுள்ள நெருங்கிய வர்த்தகத் தொடர்பு காரணமாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

இருப்பினும், இந்திய ஏற்றுமதியாளர்கள் அனைவரும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக அமெரிக்கா நேரடியாக எவ்விதக் குற்றச்சாட்டும் முன்வைக்கவில்லை என்பதை இந்த அறிக்கை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

மெக்சிகோ, இந்தியா மற்றும் வியட்நாம் வழியாக சுமார் 67 பில்லியன் டாலர் சீனப் பொருட்கள் திசைதிருப்பப்பட்டிருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சவால்கள்

இந்திய உற்பத்தியும் எதிர்கால சவால்களும்

சீனாவில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் அவற்றை முழுமையாகத் தயாரித்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வது தவறல்ல என அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால், முழுமையான பொருளை இறக்குமதி செய்து சிறிய மாற்றங்களுடன் ஏற்றுமதி செய்வதையே தடுக்க முயல்கிறது.

இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சந்தேகத்திற்குரிய வர்த்தகப் பாதைகளைக் கண்காணிக்க அமெரிக்கச் சுங்கத்துறை திட்டமிட்டுள்ளது.

இதனால் வருங்காலத்தில் இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது பொருட்களின் உண்மையான உற்பத்தித் தன்மை குறித்துக் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்க சந்தையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள இந்திய நிறுவனங்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும்.

ADVERTISEMENT