LOADING...
இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை சைலெண்டாக மாற்றியமைத்தது வெள்ளை மாளிகை; என்னென்ன மாற்றங்கள்?
வெள்ளை மாளிகை வர்த்தக அறிக்கையில் சில முக்கிய மாற்றங்களை ரகசியமாக மேற்கொண்டுள்ளது

இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை சைலெண்டாக மாற்றியமைத்தது வெள்ளை மாளிகை; என்னென்ன மாற்றங்கள்?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2026
09:31 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட்ட ஒரே நாளில், வெள்ளை மாளிகை அந்த அறிக்கையில் சில முக்கிய மாற்றங்களை ரகசியமாக மேற்கொண்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் தன்மையில் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. வெள்ளை மாளிகை முதலில் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வாங்க இந்தியா உறுதி அளித்துள்ளது (Committed)" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், திருத்தப்பட்ட புதிய அறிக்கையில் "வாங்க உத்தேசித்துள்ளது(Intends)" என அந்த வார்த்தை மென்மையாக்கப்பட்டுள்ளது. இது கட்டாய கொள்முதல் அல்ல என்பதைக் குறிக்கிறது.

விலக்கு

ஒப்பந்தத்தில் விலக்கப்பட்ட அம்சங்கள்

விவசாயப் பொருட்கள்: இந்தியா இறக்குமதி செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியலில் இருந்து 'விவசாயம்' (Agricultural) என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரி குறைக்கப்பட வேண்டிய பட்டியலில் இருந்து 'சில பருப்பு வகைகள்' (Certain Pulses) நீக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் சேவை வரி: "இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும்" என்ற நேரடி வாசகம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக "டிஜிட்டல் வர்த்தக விதிகள் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும்" என்று மாற்றப்பட்டுள்ளது.

வரி

ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை

இந்த மாற்றங்களுக்கு மத்தியிலும், இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரியை அதிபர் டிரம்ப் ஏற்கனவே நீக்கியுள்ளார். இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்தத் திடீர் திருத்தங்கள் குறித்து இந்தியத் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் ஏதும் வரவில்லை.

Advertisement