Loading...
பதவியிலிருந்து விலகுகிறார் டிம் குக்; ஆப்பிள் நிறுவனத்திற்கு புதிய சிஇஓ; யார் இந்த ஜான் டர்னஸ்?
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஜான் டர்னஸ்

பதவியிலிருந்து விலகுகிறார் டிம் குக்; ஆப்பிள் நிறுவனத்திற்கு புதிய சிஇஓ; யார் இந்த ஜான் டர்னஸ்?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 31, 2026
06:30 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது வரலாற்றிலேயே மிக முக்கிய தலைமை மாற்றத்தை சந்தித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றி வந்த டிம் குக், வரும் செப்டம்பர் 1 அன்று அப்பதவியிலிருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் பிரிவின் மூத்த துணைத் தலைவராக உள்ள ஜான் டர்னஸ் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைப் பொறுப்பு

நிர்வாகக் குழுவின் நிர்வாகத் தலைவராகத் தொடரும் டிம் குக்

சிஇஓ பதவியிலிருந்து விலகினாலும் டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறவில்லை.

அவர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராக தொடர்ந்து செயல்படுவார்.

ஆப்பிள் நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளிலிருந்து விலகி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் சீன அரசுடனான தூதரக வர்த்தக உறவுகள், அரசாங்க ஒழுங்குமுறை நடைமுறைகள் போன்ற முக்கியப் பகுதிகளை டிம் குக் கவனித்துக் கொள்வார்.

இந்தத் தலைமை மாற்றம் செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ள ஆப்பிளின் புதிய பொருட்கள் அறிமுக நிகழ்விற்கு சில நாட்களுக்கு முன் நிகழ்ந்துள்ளது.

ஜான் டர்னஸ்

ஆப்பிளின் புதிய சிஇஓ ஜான் டர்னஸ் யார்?

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜான் டர்னஸ், 2021 முதல் அதன் வன்பொருள் பொறியியல் பிரிவை முன்னின்று நடத்தி வருகிறார்.

ஐபோன் உள்ளிட்ட நிறுவனத்தின் முன்னணி தயாரிப்புகளின் உருவாக்கத்தில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

டிம் குக் சப்ளை சேயின் மற்றும் நிர்வாகத்தில் கவனம் செலுத்தியவர், ஆனால் ஜான் டர்னஸ் தொழில்நுட்பப் பொறியியல் பின்னணியைக் கொண்டவர்.

டிம் குக் அவரை ஒரு அற்புதமான பொறியாளர் மற்றும் சிந்தனையாளர் என்று பாராட்டியுள்ளார்.

இதனால் ஆப்பிளின் தயாரிப்புகளில் புதிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ADVERTISEMENT

எதிர்பார்ப்பு

ஆப்பிள் தயாரிப்புகளில் எதிர்பார்க்கப்படும் முக்கிய மாற்றங்கள்

ஜான் டர்னஸின் தலைமையின் கீழ் ஆப்பிள் தயாரிப்புகளின் வடிவமைப்பு மற்றும் ஹார்டுவேர் தொழில்நுட்பங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் மற்றும் புதுமைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.

உதிரிபாகங்களின் விலை உயர்வு, விநியோக சங்கிலி அழுத்தங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகரித்து வரும் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில், தயாரிப்புகளின் புதுமையையும் பிரீமியம் விலையையும் சமநிலைப் படுத்துவது புதிய சிஇஓவின் முதன்மை சவாலாக இருக்கும்.

டிம் குக்கின் தொடர்ச்சியான வழிகாட்டுதலுடன் ஆப்பிள் தனது அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கிறது.

ADVERTISEMENT