Swiggy, Zomato ஊழியர்கள் ஸ்டிரைக்: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆர்டர் செய்ய மாற்று வழிகள் இதோ!
செய்தி முன்னோட்டம்
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் தயாராகி வரும் நிலையில், டெலிவரி கட்டணம் மற்றும் பணிச் சூழல் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி (Swiggy), சோமாட்டோ (Zomato) மற்றும் பிளிங்கிட் (Blinkit) ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவு நேரங்களில் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவது, ஆனால் அதற்கேற்ற ஊக்கத்தொகை (Incentives) வழங்கப்படாதது மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற காரணங்களை முன்வைத்து ஊழியர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் பல முக்கிய நகரங்களில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யப்படுவதில் பெரும் தாமதம் அல்லது சேவை முடக்கம் ஏற்பட்டுள்ளது.
தீர்வுகள்
பார்ட்டிக்கு தயாராகுபவர்களுக்கான தீர்வுகள்
உங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பாதிக்கப்படாமல் இருக்க இதோ சில மாற்று வழிகள்: உணவகங்களுக்கு நேரடியாகச் செல்லுதல்: ஆன்லைன் டெலிவரியை மட்டும் நம்பியிருக்காமல், அருகிலுள்ள உணவகங்களுக்கு நேரடியாக சென்று உணவை 'பார்சல்' வாங்கி கொள்ளலாம். நேரடி ஆர்டர்கள்:DotPe, போன்ற தளங்கள் அல்லது உணவகங்களின் சொந்த மொபைல் செயலிகள் மூலம் நேரடியாக ஆர்டர் செய்தால், அவர்கள் சொந்தமாக வைத்துள்ள ஊழியர்கள் மூலம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளது. உள்ளூர் மளிகைக் கடைகள்: பிளிங்கிட், Zepto போன்றவற்றுக்கு மாற்றாக, உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் அல்லது மளிகை கடைகளில் நேரடியாகப் பொருட்களை வாங்கலாம். முன்கூட்டியே திட்டமிடுதல்: நள்ளிரவு நேரக் கூட்டத்தை தவிர்க்க, மாலை நேரத்திலேயே தேவையான சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்களை வாங்கி வைத்துக் கொள்வது சிறந்தது.