Loading...
உயரும் சர்க்கரை விலை: பிளிங்கிட், செப்டோவில் வாங்குவதற்கு கட்டுப்பாடு
பொதுமக்கள் சர்க்கரை வாங்கும் அளவுக்கு நிறுவனங்கள் வரம்புகளை விதித்துள்ளன

உயரும் சர்க்கரை விலை: பிளிங்கிட், செப்டோவில் வாங்குவதற்கு கட்டுப்பாடு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 27, 2026
12:06 pm

செய்தி முன்னோட்டம்

அடுத்தடுத்து வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு இந்தியாவில் சர்க்கரையின் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதன் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். சர்க்கரையின் சில்லறை விற்பனை விலை உயர்ந்துள்ள சூழலில், பொதுமக்கள் வாங்கும் அளவுக்கு நிறுவனங்கள் வரம்புகளை விதித்துள்ளன. விரைவு நுகர்வு வர்த்தக தளங்களான செப்டோ, பிளிங்கிட் மற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆகியவற்றில் சர்க்கரை வாங்குவதற்கான அளவுகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

கட்டுப்பாடு

ஆன்லைன் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் கெடுபிடி

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் ஒரு ஆர்டருக்கு இரு 1-கிலோ பாக்கெட்டுகள் மட்டுமே வாங்க முடியும் என வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

பிளிங்கிட் மற்றும் செப்டோ செயலிகளிலும் 5-கிலோ பாக்கெட்டுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பல பிரபல பிராண்டுகளின் சர்க்கரை இருப்பு இல்லை எனக் காட்டப்படுகிறது.

டி-மார்ட் மற்றும் ரிலையன்ஸ் போன்ற முன்னணி சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளும் ஒரு வாடிக்கையாளருக்கு 2 முதல் 3 கிலோ வரை மட்டுமே சர்க்கரை விற்பனை செய்ய கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வருகின்றன.

பின்னணி

சர்க்கரை விலை உயர்வுக்கான பின்னணி

உள்நாட்டு சந்தையில் கரும்பு விளைச்சல் பாதிப்பு மற்றும் சர்க்கரை பதுக்கல் போன்ற காரணங்களால் விலை அதிகரித்துள்ளது.

இதனால் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட் பாதிக்கப்படுவதுடன், இனிப்புக் கடைகள் மற்றும் பேக்கரிகளின் உற்பத்திச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது.

சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டைப் போக்கவும் மத்திய அரசு பல முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அக்டோபர் 31 வரை 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை சுங்க வரி இன்றி இறக்குமதி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் கச்சா சர்க்கரையை சுத்திகரிக்கப்பட்டு சில்லறை சந்தைக்கு கொண்டு வர இறக்குமதியாளர்களுக்குப் பில் ஆஃப் என்ட்ரி தாக்கல் செய்த நாளிலிருந்து 2 மாதங்கள் வரை அவகாசம் வழங்கி DGF) புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT