சென்செக்ஸ் 800 புள்ளிகள் மற்றும் நிஃப்டி 220 புள்ளிகளுக்கு மேல் சரிவு
செய்தி முன்னோட்டம்
இந்திய பங்குச்சந்தை காரிடாரில் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த சுமாரான முன்னேற்றம் இன்று அடியோடு முடக்கப்பட்டு, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை வீழ்ச்சியைச் சந்தித்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உள்நாட்டுச் சந்தையின் லாப நோக்கு விற்பனை காரணமாக, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஒரே நாளில் 800 புள்ளிகளுக்கு மேல் அடியோடு சரிந்துள்ளது. இந்த சரிவினால், சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனத்தில் இருந்து சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டாளர்களின் பணம் நொடிப் பொழுதில் காற்றில் கரைந்துள்ளது.
சரிவின் பிடி
IT பங்குகளின் வீழ்ச்சியும், லாப நோக்கமும்
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று காலை 74,507.73 என்ற புள்ளிகளில் மந்தமாகத் தொடங்கிய நிலையில், வர்த்தக நேரத்தின் இடையில் 801.42 புள்ளிகள் வரை அதிரடியாகக் குறைந்து 73,848.42 புள்ளிகளில் வர்த்தகமாகி நிலைகுலைந்தது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான (Nifty 50) 224.20 புள்ளிகள் வரை சரிந்து 23,259.35 புள்ளிகளில் வர்த்தகமானது. கடந்த சில தினங்களாக வேகமாக உயர்ந்த நிஃப்டி ஐடி குறியீடு இன்று 4%-க்கும் அதிகமாக சரிந்து சந்தையை பின்னுக்கு இழுத்தது. முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா ஆகியவற்றின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. கடந்த சில நாட்களாக ஐடி பங்குகள் உச்சத்தில் இருந்ததால், முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை அவசரமாக விற்று லாபம் பார்த்ததே திடீர் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.
இந்திய ரூபாயின் சரிவு
பங்குச்சந்தை திடீரென வீழ்ச்சியடைய முக்கியக் காரணங்கள்
அமெரிக்க - ஈரான் போர்ப் பதற்றம்: அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் கெஷ்ம் தீவு (Qeshm Island) மீதான பாதுகாப்புத் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பகுதியில் போர்ப் புயல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இது உலகளாவிய முதலீட்டாளர்களின் தைரியத்தை அடியோடு உலுக்கியுள்ளது. எகிறும் கச்சா எண்ணெய் விலை: மேற்காசியப் போர்ப் பதற்றத்தால் சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை 0.88% உயர்ந்து ஒரு பேரல் 96.84 டாலராக எகிறியுள்ளது. இது இந்தியாவின் இறக்குமதிச் செலவை அதிகரித்து பணவீக்கத்தை உருவாக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணங்கள்
பங்குச்சந்தை திடீரென வீழ்ச்சியடைய முக்கியக் காரணங்கள்
கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தகத் தொடக்கத்திலேயே 15 பைசா வரை சரிந்து 95.47 ரூபாய் என்ற மிக பலவீனமான நிலையை எட்டியுள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து தங்களது முதலீடுகளைத் தொடர்ந்து மெகா அளவில் திரும்பப் பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ₹8,363 கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் அதிரடியாக விற்று வெளியேறியுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழு கூட்டம் தற்பொழுது தொடங்கியுள்ள நிலையில், வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் குறித்து ஆர்பிஐ எடுக்கப் போகும் கொள்கை முடிவுகள் மீதான அதீத எதிர்பார்ப்பும் சந்தையில் ஒருவித எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.