Loading...
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 20 புதிய விமானங்கள் சேர்ப்பு; தினமும் 200 விமானங்கள் இயக்கத் திட்டம்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 20 புதிய விமானங்கள் சேர்ப்பு

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 20 புதிய விமானங்கள் சேர்ப்பு; தினமும் 200 விமானங்கள் இயக்கத் திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 03, 2026
06:27 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பிரபல பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், வரவிருக்கும் குளிர்காலம் மற்றும் பண்டிகைக் காலப் பயண நெரிசலை எதிர்கொள்ள தனது சேவையை அதிரடியாக விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது. அக்டோபர் நடுப்பகுதி முதல் நவம்பர் நடுப்பகுதிக்குள் 20 புதிய விமானங்களைக் குத்தகை அடிப்படையில் தனது படையில் சேர்க்க ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. துர்கா பூஜை பண்டிகைக் காலத்தில் தொடங்கும் இந்த நடவடிக்கை மூலம், நாளொன்றுக்கு 200 விமானங்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏர்பஸ்

போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களின் சேர்க்கை

இந்த புதிய சேர்க்கையில் 15 போயிங் விமானங்கள் மற்றும் 5 ஏர்பஸ் விமானங்கள் இடம்பெறவுள்ளன.

இதில் சேர்க்கப்பட உள்ள ஏர்பஸ் A321 மாடல் விமானங்கள், அதிகச் இருக்கை வசதிகளைக் கொண்டவை என்பதால், அதிகக் தேவைகளுள்ள பாதைகளில் கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

இந்த புதிய விமானங்கள் வரவிருக்கும் குளிர்காலப் பயணப் பருவம் மட்டுமன்றி, அதைத் தொடர்ந்து வரும் கோடைகாலப் பயணப் பருவத்திலும் தொடர்ந்து இயக்கப்பட உள்ளன.

முறைகள்

டேம்ப் லீஸ் (Damp Lease) மற்றும் வெட் லீஸ் (Wet Lease) முறைகள்

இந்த 20 விமானங்களும் டேம்ப் லீஸ் மற்றும் வெட் லீஸ் ஒப்பந்த முறைகளின் கீழ் பெறப்படுகின்றன.

இதில் டேம்ப் லீஸ் என்பதில் விமானத்தை வழங்கும் நிறுவனம் விமானம், விமானி மற்றும் பராமரிப்பு உதவிகளை வழங்கும்.

விமானப் பணிப்பெண்களை ஸ்பைஸ்ஜெட் வழங்கும்.

வெட் லீஸ் முறையில் விமானம், முழுமையான ஊழியர்கள், காப்பீடு மற்றும் பராமரிப்பு செலவுகள் அனைத்தையும் விமானத்தை குத்தகைக்கு வழங்கும் நிறுவனமே முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.

ADVERTISEMENT

வணிக நோக்கம்

விமானக் கட்டணக் கட்டுப்பாடு மற்றும் வணிக நோக்கம்

பண்டிகை காலங்களில் நிலவும் அதிகத் தேவையால் விமானக் கட்டணங்கள் பெருமளவில் உயர்வதைக் கட்டுப்படுத்தவும், சந்தையில் விமான சேவையை சீராகப் பராமரிக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என ஸ்பைஸ்ஜெட் முதன்மை வணிக அதிகாரி தெபோஜோ மகர்ஷி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் தடையற்ற பயண சேவையை வழங்குவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

ADVERTISEMENT