Loading...
சர்வதேச சரிவிற்கு மத்தியும் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு! காரணம் என்ன?
சர்வதேச சரிவிற்கு மத்தியும் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு

சர்வதேச சரிவிற்கு மத்தியும் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு! காரணம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 15, 2026
01:29 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க பணவீக்க உயர்வு மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளின் கடுமையான வீழ்ச்சிக்கு மத்தியிலும், இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (அக்டோபர் 15) வர்த்தகத்தில் ஏற்றத்தைக் கண்டுள்ளன. பிஎஸ்இ சென்செக்ஸ் 1,012.34 புள்ளிகள் (1.39%) உயர்ந்து 73,794.23 புள்ளிகளையும், என்எஸ்இ நிஃப்டி 50 குறியீடு 295.55 புள்ளிகள் (1.31%) உயர்ந்து 22,918.25 புள்ளிகளையும் எட்டின. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் அதிகபட்சமாக 73,798.59 புள்ளிகள் வரை உயர்ந்து 1,100 புள்ளிகளுக்கு மேலான ஏற்றத்தை பதிவு செய்தது. தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளின் வலுவான வளர்ச்சியே இந்த உயர்வுக்கு முதன்மைக் காரணமாக அமைந்தது.

அமெரிக்க பணவீக்கம்

அமெரிக்க பணவீக்கமும் உலகளாவிய பங்குச் சந்தை சரிவும்

அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 3.4% ஆக இருந்த நிலையில், செப்டம்பரில் 3.7% ஆக அதிகரித்தது.

இது பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்பை விட அதிகமாகும்.

இதனால் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தக்கூடும் என்ற அச்சத்தால் வோல்ட் ஸ்டிரீட் சந்தையில் நாஸ்டாக் குறியீடு 1.88% வரை சரிந்தது.

இதன் எதிரொலியாக ஆசிய சந்தைகளான தென்கொரியாவின் கோஸ்பி 7 சதவீதமும், ஜப்பானின் நிக்கே 4 சதவீதத்திற்கும் அதிகமாகவும் கடுமையான சரிவை சந்தித்தன.

இருப்பினும் இந்திய சந்தை இந்த சரிவை முறியடித்து தனியாக ஏற்றம் கண்டது.

ஐடி பங்குகள்

ஐடி பங்குகள் ஏற்றம் மற்றும் நிறுவனங்களின் லாப முடிவுகள்

இந்திய சந்தையின் இந்த மீட்சிக்குத் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளே பெரும் பக்கபலமாக இருந்தன.

நிஃப்டி ஐடி குறியீடு 2.60% உயர்ந்தது. இதில் டெக் மஹிந்திரா 3.69%, இன்ஃபோசிஸ் 3.15%, டிசிஎஸ் 2.98% மற்றும் எச்சிஎல் டெக் 2.66% வரை உயர்ந்தன.

குறிப்பாக எச்சிஎல் டெக் நிறுவனத்தின் எதிர்பார்ப்பை விட சிறந்த இரண்டாம் காலாண்டு லாப முடிவுகள் இத்துறையின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்தன.

மேலும் பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் நல்ல ஏற்றத்தைப் பதிவு செய்தன.

ADVERTISEMENT

வரி குறைப்பு

சர்வதேச ஏஐ சரிவும் எல்டிசிஜி வரி குறைப்பு நம்பிக்கையும்

சர்வதேச சந்தைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த தொழில்நுட்பப் பங்குகளில் ஏற்பட்டுள்ள சரிவு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை மீண்டும் இந்திய சந்தையை நோக்கித் திருப்பக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும், நீண்டகால மூலதன ஆதாய வரி மற்றும் எஸ்டிடி வரிகள் குறித்து பங்குச் சந்தை பங்குதாரர்களின் கருத்துகளைக் கேட்க அரசு தயாராக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயக்கிழமை தெரிவித்திருந்தார்.

வரவிருக்கும் பட்ஜெட்டில் வரித் தளர்வுகள் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் சந்தையின் இந்த திடீர் ஏற்றத்திற்கு மற்றொரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT