LOADING...
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு! இனி கடன்களுக்கான வட்டி குறையுமா? 
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு! இனி கடன்களுக்கான வட்டி குறையுமா? 

எழுதியவர் Venkatalakshmi V
Dec 05, 2025
11:00 am

செய்தி முன்னோட்டம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கியக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை(ரெப்போ ரேட்) 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை ஆய்வுக் குழுவின் மூன்று நாள் கூட்டத்திற்குப் பிறகு, ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ரெப்போ வட்டி விகிதம் 5.50% இலிருந்து 5.25% ஆகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டு 2025-ல் இது நான்காவது முறையாகும். மொத்தத்தில் இந்த ஆண்டு மட்டும் 125 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகித குறைப்பை தொடர்ந்து, Standing Deposit Facility விகிதம் 5% ஆகவும், MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் ஆகியவை 5.5% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement