LOADING...
கரண்ட் கட் ஆனால் கவலையில்லை, Ola Shakti மூலம் இனி AC கூட இன்வெர்ட்டரில் ஓடும்!
பல வகையான எரிசக்தி சேமிப்பு பயன்பாடுகளுக்கான பல்நோக்கு தீர்வாகும்

கரண்ட் கட் ஆனால் கவலையில்லை, Ola Shakti மூலம் இனி AC கூட இன்வெர்ட்டரில் ஓடும்!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2025
11:13 am

செய்தி முன்னோட்டம்

ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், மின்சக்தி துறையில் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' ஒரு புதிய தயாரிப்பான 'ஓலா சக்தி' யை இன்று (வியாழக்கிழமை, அக்டோபர் 16, 2025) அறிமுகப்படுத்தினார். இது Power backup, solar storage மற்றும் வோல்டேஜ் நிலைப்படுத்தல் (Voltage Stablisation) உள்ளிட்ட பல வகையான எரிசக்தி சேமிப்பு பயன்பாடுகளுக்கான பல்நோக்கு தீர்வாகும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அம்சங்கள்

ஓலா சக்தியின் முக்கிய அம்சங்கள்

இந்தச் சாதனம் சூரிய சேமிப்பு, பவர் பேக்அப், மின்னழுத்த நிலைப்படுத்தல் (Voltage Stabilization) மற்றும் பெயர்வுத்திறன் (Portability) உள்ளிட்ட பல ஆற்றல் சேமிப்பு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். இரட்டை மாடி வீடுகள் மற்றும் பண்ணை வீடுகளுக்கு இது மணிக்கணக்கில் பவர் பேக்அப்பை வழங்க முடியும். ஏர் கண்டிஷனர்கள் போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் சாதனங்களுக்கு கூட பவர் வழங்க முடியும். மேலும், ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை சார்ஜ் செய்யவும் இது உதவுகிறது. ஓலா சக்தி சுமார் 90% செயல்திறனை கொண்டுள்ளது மற்றும் குறைந்தபட்ச பராமரிப்புடன் நீண்ட நேரம் நீடிக்கும்.

இயக்கம்

இரண்டு வகைகளில் கிடைக்கிறது 

இந்த சாதனம் இரண்டு வகைகளில் கிடைக்கிறது: சிறிய வகை: 5.2 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. உயர் வகை: 9.1 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இந்த புதிய ஓலா சக்தி சாதனத்தை மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் இயக்க முடியும். சுத்தமான எரிசக்தி இலக்குகளை நோக்கி நகரும் ஓலா எலக்ட்ரிக், தனது திட்டமிட்ட வெளியீட்டுத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.