Loading...
7.5 லட்சம் தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்; 1953 கயிறு தொழில் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டம்
1953 கயிறு தொழில் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டம்

7.5 லட்சம் தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்; 1953 கயிறு தொழில் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 08, 2026
01:52 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் 7.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழும் கயிறு துறையை நவீனப்படுத்தவும், சட்டரீதியான ஆவண சுமைகளைக் குறைக்கவும் 1953 ஆம் ஆண்டின் கயிறு தொழில் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய எம்எஸ்எம்இ அமைச்சகம் ஆயத்தமாகி வருகிறது. 70 ஆண்டுகள் பழமையான இந்த சட்டத்தில் உள்ள வரையறைகளை விரிவுபடுத்தி, தற்போதைய சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவதே புதிய நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும். தென்னிந்தியாவில் பெருமளவில் தொழிலாளர்கள் உள்ள இந்த துறையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கயிறு ஏற்றுமதி சாதனை

FY26 நிதியாண்டில் ₹6,614 கோடியைத் தொட்டு சாதனை படைத்த கயிறு ஏற்றுமதி

இந்தியாவின் கயிறு பொருட்களுக்கான சர்வதேச தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 2024-25 நிதியாண்டில் (FY25) ₹4,343 கோடியாக இருந்த கயிறுப் பொருட்களின் ஏற்றுமதி, 2025-26 நிதியாண்டில் (FY26) 52 சதவீதம் உயர்ந்து ₹6,614 கோடியை எட்டி புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா, சீனா, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்திய கயிறு பாய்கள், கயிறு நாரிலிருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் மற்றும் கொக்கோபிட் (Cocopeat) ஆகியவற்றின் முதன்மையான இறக்குமதி சந்தைகளாக விளங்குகின்றன.

இயற்கை கயிறு நார்

செயற்கை நாரிலிருந்து இயற்கைக் கயிறு நாரை நோக்கிய சர்வதேச மாற்றம்

பிளாஸ்டிக் மற்றும் செயற்கை நார்களுக்கு மாற்றாகக் கயிறு நார் தயாரிப்புகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப (Biodegradable) விளங்குவதால் உலகளவில் இவற்றுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

மெத்தைகள் மற்றும் கயிறுகள் தயாரிப்பில் செயற்கைப் பொருட்களுக்குப் பதிலாக கயிறு நாரைப் பயன்படுத்துவது அதிக லாபத்தை ஈட்டித் தரும் என கோகலே பொருளாதார நிறுவனத்தின் நிபுணர் குருதாஸ் நுல்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேங்காய் ஓடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பயோசார் கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் கார்பன் கிரெடிட் ஈட்டுவதற்கும் முக்கிய மூலப்பொருளாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

டிஜிட்டல் தளம்

ஒற்றை சாளர டிஜிட்டல் தளம் மற்றும் இந்தியா எஸ்எம்இ ஃபாரம் கோரிக்கைகள்

இந்தியாவில் உள்ள சுமார் 1 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா எஸ்எம்இ ஃபாரம் தலைவர் வினோத் குமார், சட்டத் திருத்தம் கயிறு கழிவுத் துகள்கள் (Coir pith), கொக்கோபிட், புவி-ஜவுளி (Geo-textiles) போன்ற அனைத்துப் புதிய பொருட்களையும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பலமுறை சமர்ப்பிக்கப்படும் ஆவண சுமைகளைக் குறைத்து ஒரே டிஜிட்டல் இன்டெர்பேஸ் மூலம் எளிமையான முறைகளை உருவாக்க வேண்டும் என்றும், ஏற்றுமதித் தடங்கல்களிலிருந்து எளிய கைவினைஞர்களை பாதுகாக்கும் நிதியுதவித் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT