LOADING...
இல்லத்தரசிகளே கவனிங்க! எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாடு; இனி 25 நாட்கள் இடைவெளி கட்டாயம்
கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கான இடைவெளி 21லிருந்து 25 நாட்களாக உயர்வு

இல்லத்தரசிகளே கவனிங்க! எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாடு; இனி 25 நாட்கள் இடைவெளி கட்டாயம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 10, 2026
07:37 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா) நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தை சீர்செய்ய மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் (14.2 கிலோ எல்பிஜி) முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி தற்போது 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக மக்கள் முன்கூட்டியே சிலிண்டர்களை முன்பதிவு செய்து பதுக்குவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டை விட, சாதாரண வீடுகளுக்குத் தடையின்றி எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யவே இந்த மாற்றம் என அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

விலை

எல்பிஜி விலை நிலவரம் (மார்ச் 10, 2026)

மத்திய கிழக்கு பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது: சென்னை: ₹928.50 (14.2 கிலோ சிலிண்டர்) டெல்லி: ₹913.00 கொல்கத்தா: ₹939.00 மும்பை: ₹912.50 உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு வருடாந்திரம் 12 சிலிண்டர்கள் வரை ₹300 மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்று வழிகள்

மாற்று வழிகளைத் தேடும் இந்தியா

எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்: புதிய ஒப்பந்தங்கள்: அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நார்வே ஆகிய நாடுகளுடன் கூடுதல் எரிவாயு இறக்குமதி செய்யப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பாதை மாற்றம்: போர் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றாகப் புதிய கடல்வழிப் பாதைகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது. கமிட்டி அமைப்பு: ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையினரின் எரிவாயு தேவையை ஆய்வு செய்யப் பெட்ரோலிய அமைச்சகம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

Advertisement

பெட்ரோல்

பெட்ரோல், டீசல் விலை மாறுமா?

கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் $130 ஐத் தாண்டாத வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என அரசு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். தற்போது கச்சா எண்ணெய் விலை சுமார் $100 அளவில் நீடிக்கிறது. மேலும், இந்தியாவில் விமான எரிபொருள் தட்டுப்பாடு ஏதுமில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

Advertisement