Loading...
வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு; நவம்பர் 1 முதல் புதிய விலை நிலவரம்
வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு

வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு; நவம்பர் 1 முதல் புதிய விலை நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 01, 2026
11:36 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய செலாவணி மாற்றங்களின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 1-ஆம் தேதியான இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான LPG கேஸ் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. சென்னையில் வணிகச் சிலிண்டர் விலை இன்று ரூ. 11 உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் 19 கிலோ வணிகச் சிலிண்டரின் விலை ரூ. 3,016.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ. 66.50 உயர்த்தப்பட்டு ரூ. 2,984-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் மீண்டும் விலை உயர்ந்து ரூ. 3,000-ஐ கடந்துள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர்

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமா?

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ள போதிலும், பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் முந்தைய மாத விலையான ரூ. 957.50 என்ற அளவிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் மற்றும் போர்ப் பதற்றச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் உள்நாட்டிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் தொடர்ந்து தாக்கம் ஏற்பட்டு வருகிறது.

இந்தத் தொடர் விலை உயர்வு ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு வணிகர்களை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT