Loading...
வங்கி அதிகாரிகளுக்கே தெரியாத ரகசியம்! எல்ஐசி பங்குகள் மூலம் $3.3 பில்லியன் திரட்டிய மத்திய அரசு; பரபரப்பு பின்னணி
எல்ஐசி பங்கு விற்பனை

வங்கி அதிகாரிகளுக்கே தெரியாத ரகசியம்! எல்ஐசி பங்குகள் மூலம் $3.3 பில்லியன் திரட்டிய மத்திய அரசு; பரபரப்பு பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 06, 2026
06:59 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) கூடுதல் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் 3.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.27,000 கோடிக்கும் மேல்) நிதியைத் திரட்டி மத்திய அரசு சாதனை படைத்துள்ளது. இந்திய பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய இரண்டாம் கட்டப் பங்கு விற்பனையாகக் கருதப்படும் இந்த நடவடிக்கையில், பங்குச் சந்தை வணிகர்கள் முன்கூட்டியே கணித்து எல்ஐசி பங்குகளின் விலையைக் குறைப்பதைத் தடுக்கும் பொருட்டு, மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை விற்பனைத் தேதியை மிக ரகசியமாக வைத்திருந்தது.

ரகசியம்

கடைசி நேரம் வரை ரகசியமாக வைக்கப்பட்ட பங்கு விற்பனை விவரங்கள்

இந்த விற்பனைக்கு ஆலோசனைகளை வழங்கி வந்த நான்கு பிரபல முதலீட்டு வங்கிகளுக்கே பங்கு விற்பனை தொடங்கப்படும் விவரம் கடைசி நேரம் வரையிலும் தெரிவிக்கப்படவில்லை.

விற்பனை தொடங்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே புது டெல்லியில் உள்ள துறை அலுவலகத்திற்கு வங்கி அதிகாரி ஒருவர் அழைக்கப்பட்டார்.

அங்கே அவரிடம் அன்று மாலையே எல்ஐசி பங்கு விற்பனை தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட பின்னரே பங்குச் சந்தைகளுக்கான அறிவிப்பு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், சந்தை கௌரவத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஆலோசனை வங்கிகள் எந்தவித கட்டணமும் பெறாமல் இலவசமாகப் பணியாற்ற ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

செபி நெறிமுறை

முதலீட்டாளர்களின் ஆதரவும் செபியின் நெறிமுறைகள் பூர்த்தியும்

ஆரம்பத்தில் எல்ஐசி நிறுவனத்தின் 2.5 சதவீத பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்ட அரசு, முதலீட்டாளர்களின் தேவையைப் பொறுத்து கூடுதலாக 4 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் விருப்பத் தேர்வையும் கைவசம் வைத்திருந்தது.

எதிர்பார்த்தபடியே பெருநிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு 3.32 மடங்காக உயர்ந்து அதிக வரவேற்பைப் பெற்றதால், கூடுதல் பங்குகளை விற்கும் முடிவை அரசு கையில் எடுத்தது.

இதன் மூலம் எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு பங்களிப்பு 10 சதவீதமாக உயர்ந்து, இந்திய பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் வழிகாட்டு நெறிமுறைகளை 2027 மே மாதக் கெடுவுக்கு முன்னதாகவே வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.

ADVERTISEMENT