புதிய சந்தா திட்டங்கள் மற்றும் கட்டண மாற்றங்களை அறிவித்துள்ளது JioHotstar: விவரங்கள் உள்ளே
செய்தி முன்னோட்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 'வியாகாம் 18' மற்றும் டிஸ்னி நிறுவனத்தின் 'ஸ்டார் இந்தியா' ஆகிய நிறுவனங்களின் இணைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜியோஹாட்ஸ்டார்' (JioHotstar) தளம் தனது சந்தாதாரர்களுக்காக புதிய மாதாந்திர திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக ஆண்டு சந்தாக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது பயனர்களின் வசதிக்காககுறைந்த விலையிலான மாதாந்திர திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய மாற்றங்களின்படி, பயனர்கள் தங்களுக்கு தேவையான Video Quality மற்றும் சாதனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம். குறிப்பாக, மொபைல் பயனர்களுக்கென பிரத்யேகமான குறைந்த கட்டண திட்டங்கள் மற்றும் பிரீமியம் தரத்திலான 4K வீடியோ வசதி கொண்ட குடும்பத் திட்டங்கள் எனப் பல பிரிவுகளில் இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கட்டண விவரங்கள்
புதிய சந்தா கட்டண விவரங்கள்
ரூ.79 (மொபைல் மட்டும்), ரூ.149 (சூப்பர்) மற்றும் ரூ.299 (பிரீமியம்) ஆகியவை காலாண்டு மற்றும் வருடாந்திர சந்தா விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சந்தாவில் அதிக நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் என்று ஜியோ ஹாட்ஸ்டார் கூறியிருந்தாலும், சூப்பர் மற்றும் பிரீமியம் பயனர்களுக்கான வருடாந்திர திட்டங்களின் விலையை தலா 22% மற்றும் 47% உயர்த்தியுள்ளது. சூப்பர் மற்றும் பிரீமியம் பயனர்கள் முன்பு ரூ.899 மற்றும் ரூ.1,499 செலுத்தினர், இது இப்போது ரூ.1,099 மற்றும் ரூ.2,199 ஆக உயர்ந்துள்ளது. ஹாலிவுட் உள்ளடக்கத்தைத் தவிர்த்து, மொபைல் மட்டும் திட்டங்கள், ரூ.79 முதல் ரூ.499 வரை இருக்கும். ஹாலிவுட் உள்ளடக்கத்தை அணுக, மொபைல் மட்டும் பயனர்கள் தங்கள் சந்தா காலத்தின் அடிப்படையில் ரூ.49 முதல் ரூ.399 வரை செலுத்த வேண்டும்.
ஜியோ
ஜியோ பயனர்களுக்கு சிறப்பு சலுகை
மேலும், ஜியோவின் குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களுடன் ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்கும் நடைமுறையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சினிமா ஆர்வலர்களை கவரும் வகையில் இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சந்தா வைத்திருப்பவர்கள் தங்களின் நடப்பு திட்டம் முடிவடையும் வரை பழைய விலையிலேயே சேவையைப் பெற முடியும் என்றும், புதிய சந்தாதாரர்களுக்கு புதிய கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தப் புதுப்பிப்பு ஜனவரி 28, 2026 முதல் அமலுக்கு வருகிறது