Loading...
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்கு விலை கிடுகிடு உயர்வு; 2-வது நாளில் 4% உயர்ந்து ரூ.1,480-ஐ நெருங்கியது
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்கு விலை 2-வது நாளில் 4% உயர்ந்து ரூ.1,480-ஐ நெருங்கியது

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்கு விலை கிடுகிடு உயர்வு; 2-வது நாளில் 4% உயர்ந்து ரூ.1,480-ஐ நெருங்கியது

எழுதியவர் Sekar Chinnappan
Oct 29, 2026
11:42 am

செய்தி முன்னோட்டம்

இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய அளவில் அறிமுகத்தைக் கண்ட முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, பட்டியலிடப்பட்ட இரண்டாவது நாளான வியாழக்கிழமை (அக்டோபர் 29) காலை வர்த்தகத்தில் மீண்டும் 4 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) காலை 9:18 மணி நிலவரப்படி, இதன் பங்கு மதிப்பு முந்தைய முடிவை விட ரூ.60.80 (4.29%) உயர்ந்து ரூ.1,478.30 ஆக வர்த்தகமானது. அதேபோல் மும்பை பங்குச் சந்தையிலும் (பிஎஸ்இ) ரூ.59.85 (4.22%) உயர்ந்து ரூ.1,477.20 ஆக வர்க்கமானது.

இரண்டாவது நிறுவனம்

இந்தியாவில் இரண்டாவது மிக மதிப்புமிக்க நிறுவனமாக சாதனை

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் தனது ஐபிஓ பங்கின் விலையாக ரூ.1,119 நிர்ணயித்திருந்த நிலையில், அக்டோபர் 28 அன்று 21.36% பிரீமியத்துடன் ரூ.1,358-இல் பங்குச் சந்தையில் அறிமுகமானது.

முதல் நாள் வர்த்தக முடிவில் 26.8% உயர்ந்து ரூ.1,419-இல் நிலைபெற்றது.

இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.12.5 லட்சம் கோடியைக் கடந்து, தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு அடுத்தபடியாக சந்தை மதிப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் உருவெடுத்துள்ளது.

உலக அளவில் வளர்ச்சி

உலக அளவில் 6-வது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வளர்ச்சி

பங்குச் சந்தை அறிமுகத்திற்குப் பிறகு ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 131 பில்லியன் டாலரை (ரூ.12.5 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

இதன் மூலம் சர்வதேச அளவில் 6-வது பெரிய பட்டியலிடப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனமாகவும், ஆசிய அளவில் சீனா மொபைலுக்கு ($221 பில்லியன்) அடுத்தபடியாக 2-வது பெரிய நிறுவனமாகவும் மாறியுள்ளது.

மேலும், உள்நாட்டு போட்டியாளரான பாரதி ஏர்டெல் ($130 பில்லியன்) நிறுவனத்தின் சந்தை மதிப்பை முந்தி ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ADVERTISEMENT

மிகப்பெரிய ஐபிஓ

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ரூ.30,213 கோடி ஐபிஓ வெளியீடு

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ரூ.30,213 கோடி மதிப்புள்ள பொதுப் பங்கு வெளியீடு, இந்திய பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ ஆகும்.

முதலீட்டாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த ஐபிஓ ஒட்டுமொத்தமாக 22.19 மடங்கும், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவு 70.55 மடங்கும் விண்ணப்பிக்கப்பட்டது.

பட்டியலிடப்பட்ட இரண்டு நாட்களிலேயே முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளதால், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் மீது சந்தையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT