2031-ல் 6.7 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக மாறும் இந்தியா!
அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் எவ்வளவு வளர்ச்சியடையும் என்பது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது S&P குளோபல் என்ற அமெரிக்க தகவல் நிறுவனம். தற்போது 3.4 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக இருக்கிறது இந்தியா. அடுத்த ஏழு ஆண்டுகளில் சராசரியாக 6.7 சதவிகிதம் அளவிற்கு வளர்ச்சியடையும் பட்சத்தில் 2031-ம் ஆண்டு 6.7 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக மாறும் எனத் தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். கடந்த 2022-23 நிதியாண்டில் 7.2 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருக்கிறது இந்தியப் பொருளாதாரம். ஆனால், இந்த ஆண்டு உலகம் முழுவதுமே சற்று பொருளாதார மந்தநிலை நீடிக்கும் நிலையில், இந்த நிதிாயண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவிகிதமாகக் குறைய வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம்:
பருப்பொருளியில் அளவில் அடுத்த பத்தாண்டுகளில் சீரற்ற முறையில் இருக்கும் இந்திய பொருளாதார வளர்ச்சியை, சீரான மற்றும் நிலையான வளர்ச்சியாக மாற்றுவதே இந்தியாவின் முன்னிருக்கும் பெரும் சவால் எனத் தங்களுடை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது S&P குளோபல் நிறுவனம். இந்தியாவில் உள்ள தனியார் நிறுனங்களில் தங்களது கட்டமைப்பு மற்றும் தயாரிப்பில் முதலீடுகளை அதிகரித்து வரும் நிலையில், 2025-26 நிதியாண்டில் அதிகபட்ச பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறையில் புதிய மேம்பாடுகளை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில், சேவைத்துறையே இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கியப்பங்கு வகிக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்