'வரி சலுகை அளித்தால் மட்டுமே BTA ஒப்பந்தம்': அமெரிக்காவிற்கு பியூஷ் கோயல் நிபந்தனை
செய்தி முன்னோட்டம்
போட்டி நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் வரிகளை விட இந்தியப் பொருட்களுக்கு சாதகமான வரி விதிப்பு சலுகைகளை வழங்கினால் மட்டுமே அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) குறித்து இறுதி செய்யப்படுமென என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியாக தெரிவித்துள்ளார். தற்போது இந்தியா சுமார் 60 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட நாடுகளுடன் 9 வர்த்தக ஒப்பந்தங்களை(FTA) செய்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கு சந்தைகளுக்கு இந்தியப் பொருட்களுக்கு முன்னுரிமை அணுகல் கிடைக்கிறது. மேலும் கனடா, மெக்சிகோ நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக வர்த்தகத்தில் 75% வரை குறைந்த வரி விகிதத்தில் இந்தியாவிற்கு வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்.
பேச்சுவார்த்தை
அமெரிக்காவுடனான ஒப்பந்தப் பேச்சுவார்த்தை
இந்தியாவும், அமெரிக்காவும் தங்களது முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை பிப்ரவரி மாதத்தில் இறுதி செய்திருந்தன.
இருப்பினும், அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகக் கூடுதல் பேச்சுவார்த்தைகள் தேவைப்படுகின்றன.
ஜூலை 24 முதல் இந்தியா உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா கூடுதல் 10% வரியை விதித்தது குறிப்பிடத்தக்கது.
வரும் செப்டம்பர் 30 முதல் மில்வாக்கியில் நடைபெறவுள்ள ஜி20 வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தின் போது, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் பியூஷ் கோயல் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டம்
போட்டி நாடுகளை விட முன்னிலை பெற திட்டம்
அமெரிக்கச் சந்தையில் இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுடன் இந்தியா கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.
இந்த நாடுகளை விட வரிகளில் இந்தியாவிற்கு முன்னுரிமைச் சலுகை கிடைத்தால் மட்டுமே இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் அமெரிக்காவில் அதிகப் போட்டித்தன்மையைப் பெற முடியும். க
கடந்த 2025-26 நிதியாண்டில் இந்தியா அமெரிக்காவிற்கு சுமார் 87 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
வர்த்தகப் பேச்சுவார்த்தையில் நாட்டின் பொருளாதார நலன்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் இந்த அறிவிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.