NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறாவது வாரமாக கடும் சரிவு
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறாவது வாரமாக கடும் சரிவு
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடும் சரிவு

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறாவது வாரமாக கடும் சரிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 18, 2025
    10:26 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து ஆறாவது வாரமாக கடுமையான சரிவைக் கண்டுள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தரவுகளின்படி, ஜனவரி 10ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கையிருப்பு 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு $8.7 பில்லியன் குறைந்து $625.9 பில்லியனாக உள்ளது.

    இது இந்தியாவின் நிதித் துறையில் பெரும் மாற்றத்தைக் குறிக்கிறது. ரிசர்வ் வங்கியின் தரவுகள், மொத்த கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி சொத்துக்கள் $9.5 பில்லியன் குறைந்துள்ளதாகவும் காட்டுகிறது.

    அதேசமயம், இதே காலகட்டத்தில் தங்க கையிருப்பு மதிப்பு 792 மில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது.

    சந்தை தலையீடு

    அந்நிய செலாவணி கையிருப்பு சரிவுக்கும் ரூபாய் மதிப்பு தேய்மானத்திற்கும் தொடர்பு

    அந்நியச் செலாவணி சந்தையில் ரிசர்வ் வங்கியின் தலையீடுதான் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

    கடந்த சில மாதங்களாக பெரும் அழுத்தத்தில் உள்ள இந்திய ரூபாயின் விரைவான சரிவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 1 முதல், இந்திய நாணயத்தின் மதிப்பு 3.2% குறைந்து, பொருளாதாரச் சிக்கல்களைச் சேர்த்தது.

    நாணய தேய்மானம்

    அமெரிக்க டாலருக்கு எதிராக பலவீனமடைந்து வரும் இந்திய ரூபாய்

    நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் குறைந்து, அதன் வீழ்ச்சியை தொடர்ந்தது.

    இதன் மூலம் ஒரு டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு 86.61 ஆக முடிவடைந்தது, இது நாணயத்தின் மேலும் பலவீனத்தைக் குறிக்கிறது.

    இந்த வாரத்தில் மட்டும், இந்திய ரூபாய் கிரீன்பேக்கிற்கு எதிராக 0.74% குறைந்துள்ளது.

    இது அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால், இந்தியாவின் அந்நியச் செலாவணி சந்தையில் நிலவும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆர்பிஐ
    ரிசர்வ் வங்கி
    வணிக புதுப்பிப்பு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    24 மாத யூடியூப் பிரீமியம் சந்தா இலவசம்; ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம் ஜியோ
    கூடுதலாக 30 ஜிகாவாட் சேர்ப்பு; 2024இல் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 113% அதிகரிப்பு மத்திய அரசு
    விண்வெளி SpaDeX டாக்கிங் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ இஸ்ரோ
    டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு டொனால்ட் டிரம்ப்

    ஆர்பிஐ

    இனி உங்கள் யுபிஐ கணக்கை வேறொருவரும் பயன்படுத்தலாம்; ரிசர்வ் வங்கியின் புது அம்சம் யுபிஐ
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 675 பில்லியன் டாலராக உயர்வு இந்தியா
    விவசாயம் மற்றும் MSMEகளுக்கு கடன் அணுகலை டிஜிட்டலாகும் முயற்சியாக ULI அறிமுகம் ரிசர்வ் வங்கி
    ரிசர்வ் வங்கி பெயரில் ஆன்லைன் மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை ரிசர்வ் வங்கி

    ரிசர்வ் வங்கி

    விதிகளை மீறிய NBFC நிறுவனங்களுக்கு ரூ.23 லட்சம் அபராதம்; ஆர்பிஐ அதிரடி உத்தரவு ஆர்பிஐ
    அடுத்த 4-5 ஆண்டுகளில் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை மறுசீரமைக்க ஆர்பிஐ முடிவு ஆர்பிஐ
    மோசடியான வங்கிக் கணக்குகளைக் கண்டறிய AI உதவியை நாடும் RBI ஆர்பிஐ
    டிசம்பர் முதல் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்கும்; யுபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தகவல் ஆர்பிஐ

    வணிக புதுப்பிப்பு

    வங்கிக் கணக்கில் ஆண்டிற்கு எவ்வளவு தொகை இருந்தால் வருமான வரித்துறை கண்காணிக்கும்? வங்கிக் கணக்கு
    பணக்காரர்களுக்கு இந்திய அரசு சொத்து வரி விதிக்க பிரெஞ்சு பொருளாதார நிபுணர் வலியுறுத்தல் இந்தியா
    சமூக சேவைகளுக்கு ₹5,570 கோடி செலவு செய்த கோல் இந்தியா பொதுத்துறை நிறுவனம் இந்தியா
    இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் $646.8 பில்லியனாக உயர்வு; உலக வங்கி அறிக்கை வெளியீடு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025