Loading...
ஒரே நாளில் ரூ.1,025 கோடி கார்ப்பரேட் பத்திரங்கள்! ஆர்பிஐயின் டிஜிட்டல் ரூபாய் மூலம் இந்தியாவில் புதிய சாதனை
டிஜிட்டல் ரூபாய் மூலம் கார்ப்பரேட் பாண்ட் பரிவர்த்தனை

ஒரே நாளில் ரூ.1,025 கோடி கார்ப்பரேட் பத்திரங்கள்! ஆர்பிஐயின் டிஜிட்டல் ரூபாய் மூலம் இந்தியாவில் புதிய சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 12, 2026
12:43 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் முதல்முறையாக டோக்கன் செய்யப்பட்ட கார்ப்பரேட் பத்திரங்கள் மூலம் ரூ. 1,025 கோடி நிதி திரட்டப்பட்டு, அந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) மொத்த விற்பனை டிஜிட்டல் ரூபாய் வாயிலாக வெற்றிகரமாக தீர்வு செய்யப்பட்டுள்ளன. செபி மற்றும் ஆர்பிஐ இணைந்து உருவாக்கியுள்ள டிமேட் 2.0 முன்னோடித் திட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது. இதில் முதலாவதாக ஆர்இசி லிமிடெட் நிறுவனம் செப்டம்பர் 7 அன்று 18 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.500 கோடியை வெற்றி கரமாகத் திரட்டியுள்ளது.

முன்னணி நிறுவனங்கள்

முன்னணி நிறுவனங்களின் பங்கேற்பு மற்றும் முறைமை

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 9 ஆம் தேதி லார்சன் & டூப்ரோ நிறுவனம் நான்கு முதலீட்டாளர்கள் மூலம் ரூ.500 கோடி மதிப்பிலான பாண்ட் பரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் நிறைவு செய்தது.

அதே நாளில் ஐஐஎஃப்எல் நிறுவனம் ஒரே ஒரு முதலீட்டாளர் மூலம் ரூ.25 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டது.

செபி தலைவர் துகின் காந்த பாண்டே மற்றும் ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா ஆகியோரால் உலகளாவிய ஃபின்காம்பஸ் நிகழ்வில் இந்த அதிநவீன தொழில்நுட்ப முறைமை முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.

முதலீட்டாளர்கள் பாதுகாப்பு

முதலீட்டாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் பாதுகாப்பு

இந்த புதிய டோக்கன் செய்யப்பட்ட பத்திரங்கள் மூலமாக முதலீட்டாளர்களின் வட்டி விகிதங்கள், முதிர்வு காலம் அல்லது சட்டப்பூர்வ உரிமைகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என செபி தெளிவாகத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள ஒழுங்குமுறை வைப்பகங்கள் மூலம் பகிரப்பட்ட லெட்ஜர் அமைப்பில் உரிமையாளர் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்பதால், முதலீட்டாளர்கள் தங்களின் தற்போதைய டிமேட் கணக்குகளையே இதற்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

எனினும், இந்த சேவையைப் பெற பங்கேற்கும் வங்கிகளில் டிஜிட்டல் ரூபாய் வேலட் வைத்திருப்பது அவசியமாகும்.

ADVERTISEMENT

எதிர்காலம்

எதிர்கால இரண்டாம் கட்டத் திட்டம் மற்றும் நன்மைகள்

தற்போது முதல் கட்டமாகப் புதிய கார்ப்பரேட் பத்திரங்கள் வெளியீடு மட்டும் பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக இரண்டாம் கட்டத்தில் இந்த பத்திரங்கள் சந்தையில் வாங்கி விற்கும் வர்த்தகத் தளங்களுடன் இணைக்கப்பட உள்ளன.

மத்திய அரசால் ஆதரிக்கப்படும் இந்த டிஜிட்டல் கரன்சி முறைமையானது, காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதுடன், பாரம்பரிய வங்கி அமைப்புகளை விடக் கூடுதல் வேகத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நிதிப் பரிவர்த்தனைகளை செய்ய வழிவகை செய்கிறது

ADVERTISEMENT