பட்ஜெட் 2024 : புதிய வரி விதிப்பு யாருக்கு லாபத்தை அளிக்கும்?
யூனியன் பட்ஜெட் 2024இல், நுகர்வோர் செலவு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி முறையில் சில முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். புதிய வரி விதிப்பின் கீழ், வரி அடுக்குகள் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளன: ரூ.3 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை. ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 5% வரி விதிக்கப்படும். ரூ.7 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 10% வரி விதிக்கப்படும். ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 15% வரி விதிக்கப்படும். ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு 30% வரி விதிக்கப்படும்.
யார் பயனடைவார்கள்?
திருத்தப்பட்ட வரி விதிப்புகள் ரூ.7 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் வாங்கும் தனிநபர்களுக்கு பயனளிக்கும். அவர்களுக்கு முன்பு 10% வரி விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது அவர்களின் வரி 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்களுக்கும் இது பயனளிக்கும். குடும்ப ஓய்வூதியத்தில் செய்யப்படும் பிடித்தம் 15,000 கோடியிலிருந்து 25,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் நான்கு கோடி சம்பளம் பெறும் தனிநபர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். ஆனால், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் வரி செலுத்துவோருக்கு வரி செலுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் எப்போதும் போல் 20% வரி செலுத்த வேண்டும்.