இரண்டாவது நாளாக தொடர்ந்து இறங்கு முகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்கிழமை (பிப்ரவரி 17) குறைந்துள்ளது. செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹140 குறைந்து ₹14,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1120 குறைந்து ₹1,13,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹153 குறைந்து ₹15,491 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,224 குறைந்து ₹1,23,928 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹115 குறைந்து ₹11,618 ஆகவும், ஒரு சவரன் ₹920 குறைந்து ₹92,944 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே செவ்வாய்க்கிழமை வெள்ளிவிலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹8 குறைந்து, ₹260.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல் போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.