LOADING...
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 27, 2026
10:32 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (மார்ச் 27) மீண்டும் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹80 அதிகரித்து ₹13,430 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹640 அதிகரித்து ₹1,07,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹87 அதிகரித்து ₹14,651 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹696 அதிகரித்து ₹1,17,208 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை சரிவு

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹65 அதிகரித்து ₹11,200 ஆகவும், ஒரு சவரன் ₹520 அதிகரித்து ₹89,600 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹15 குறைந்து ₹245.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,45,000 ஆகவும் விற்பனை ஆகிறது. ஈரான் -அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போருக்கு மத்தியில் கடந்த வாரம் தங்கம் விலை சரமாரியாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிப்பது முதலீடு செய்து வைத்தவர்களிடையே நம்பிக்கையை கொடுத்துள்ளது. எனினும், நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisement