தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை அதிகரிப்பு; இன்றைய விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (மார்ச் 26) மீண்டும் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹70 அதிகரித்து ₹13,670 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹560 அதிகரித்து ₹1,09,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹76 அதிகரித்து ₹14,913 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹608 அதிகரித்து ₹1,19,304 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹60 அதிகரித்து ₹11,410 ஆகவும், ஒரு சவரன் ₹480 அதிகரித்து ₹91,280 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹260.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது. ஈரான் -அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போருக்கு மத்தியில் கடந்த வாரம் தங்கம் விலை சரமாரியாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிப்பது முதலீடு செய்து வைத்தவர்களிடையே நம்பிக்கையை கொடுத்துள்ளது. எனினும், நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.