LOADING...
வாரத்தின் முதல் நாளில் விலை வீழ்ச்சி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

வாரத்தின் முதல் நாளில் விலை வீழ்ச்சி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 01, 2026
10:38 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், திங்கட்கிழமை (ஜூன் 1) தங்க விலை குறைந்துள்ளது. அதன்படி, திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹130 குறைந்து ₹14,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,040 குறைந்து ₹1,16,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹142 குறைந்து ₹15,818 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,136 குறைந்து ₹1,26,544 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹95 குறைந்து ₹12,180 ஆகவும், ஒரு சவரன் ₹760 குறைந்து ₹97,440 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹290 ஆகவும், ஒரு கிலோ ₹2,90,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியிலும் தங்கம் வெள்ளி விலைகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement