Loading...
மீண்டும் உயரும் தங்கத்தின் விலை; சவரன் விலை இதுதான்
மீண்டும் உயரும் தங்கத்தின் விலை

மீண்டும் உயரும் தங்கத்தின் விலை; சவரன் விலை இதுதான்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 15, 2026
11:29 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, புதன்கிழமை (ஜூலை 15), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹30 அதிகரித்து ₹13,180 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹240 அதிகரித்து ₹1,05,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹32 அதிகரித்து ₹14,378 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹256 அதிகரித்து ₹1,15,024 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹30 அதிகரித்து ₹11,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹240 அதிகரித்து ₹88,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 அதிகரித்து ₹240 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,40,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT