Loading...
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக் மேல் ஷாக்! இன்றைய தங்கம் விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக் மேல் ஷாக்! இன்றைய தங்கம் விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2026
10:20 am

செய்தி முன்னோட்டம்

இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹120 அதிகரித்து ₹14,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹960 அதிகரித்து ₹1,14,880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹131 அதிகரித்து ₹15,666 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,048 அதிகரித்து ₹1,25,328 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹120 அதிகரித்து ₹12,130 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹960 அதிகரித்து ₹97,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹255 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,55,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT