Loading...
நான்கு நாள் வீழ்ச்சிக்குப் பின் சற்று உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நான்கு நாள் வீழ்ச்சிக்குப் பின் சற்று உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 24, 2026
10:19 am

செய்தி முன்னோட்டம்

தொடர்ந்து நான்கு நாட்களாக கடுமையாக குறைந்த தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை (அக்டோபர் 24), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹10 அதிகரித்து ₹13,070 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹80 அதிகரித்து ₹1,04,560 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹10 அதிகரித்து ₹14,258 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹80 அதிகரித்து ₹1,14,064 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை சரிவு

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹5 அதிகரித்து ₹10,695 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹40 அதிகரித்து ₹85,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹220.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,20,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT