LOADING...
இதுதான் சரியான நேரம்..தொடர்ந்து குறைந்து வரும் தங்கத்தின் விலை! 
தங்க விலை வியாழக்கிழமை (அக்டோபர் 23) கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது

இதுதான் சரியான நேரம்..தொடர்ந்து குறைந்து வரும் தங்கத்தின் விலை! 

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2025
10:52 am

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை வியாழக்கிழமை (அக்டோபர் 23) கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹75 குறைந்து ₹11,465 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹600 குறைந்து ₹91,720 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹81 குறைந்து ₹12,508 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹648 குறைந்து, ₹1,00,064 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை சரிவு

18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹61 குறைந்து ₹9,381 ஆகவும், ஒரு சவரன் ₹488 குறைந்து ₹75,048 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி விலை இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ₹1 குறைந்து ₹159 ஆகவும், ஒரு கிலோ ₹1,59,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இந்நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலையற்ற தன்மையிலேயே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.