இரண்டாவது நாளாக வீழ்ச்சி! இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தங்க விலை சிறிய அளவில் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 குறைந்து ₹14,430 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹1,15,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹54 குறைந்து ₹15,742 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹432 குறைந்து ₹1,25,936 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹55 குறைந்து ₹12,105 ஆகவும், ஒரு சவரன் ₹96,840 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையிலும் சற்று மாற்றம் உள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹280 ஆகவும், ஒரு கிலோ ₹2,80,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியிலும் தங்கம் வெள்ளி விலைகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.