LOADING...
தங்கம் விலையில் சிறிய சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையில் சிறிய சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 26, 2026
09:57 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (பிப்ரவரி 26) குறைந்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹10 குறைந்து ₹14,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹80 குறைந்து ₹1,19,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹11 குறைந்து ₹16,277 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹88 குறைந்து ₹1,30,216 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹12,765 ஆகவும், ஒரு சவரன் ₹1,02,120 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹295.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,95,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தாலும், சர்வதேச அரசியல் சூழல்களால் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement