LOADING...
நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு குட் நியூஸ்: தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் சரிவு
தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் சரிவு

நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு குட் நியூஸ்: தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் சரிவு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 13, 2026
10:23 am

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹200 குறைந்து ₹14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,600 குறைந்து ₹1,15,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹219 குறைந்து ₹15,709 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,752 குறைந்து ₹1,25,672 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் சரிவு

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹200 குறைந்து ₹12,400 ஆகவும், ஒரு சவரன் ₹1,600 குறைந்து ₹99,200 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் வெள்ளிக்கிழமை குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹20 குறைந்து ₹280.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,80,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல் போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement