தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்கம் விலை அதிகரிப்பு.. நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, இந்த வாரம் முழுவதுமே விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) மீண்டும் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹70 அதிகரித்து ₹12,890 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹560 அதிகரித்து ₹1,03,120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹76 அதிகரித்து ₹14,062 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹608 அதிகரித்து ₹1,12,496 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹65 அதிகரித்து ₹10,760 ஆகவும், ஒரு சவரன் ₹520 அதிகரித்து ₹86,080 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ₹9 அதிகரித்து ₹254.00 ஆகவும், ஒரு கிலோ ₹9,000 அதிகரித்து ₹2,54,000 ஆகவும் விற்பனை ஆகிறது. திருமண சீசன் மற்றும் சமீபத்திய அமெரிக்க வட்டி விகித குறைப்பு அறிவிப்பு போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து விலையேற்றம் ஏற்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.