LOADING...
சீனாவுக்கு செல்லும்போது நிறுவனத்தின் மொபைல் போன்களை கொண்டு செல்ல தடை விதித்த அமெரிக்க நிறுவனம்
சீனாவுக்கு செல்லும்போது நிறுவனத்தின் மொபைல் போன்களை கொண்டு செல்ல தடை விதித்தது பிளாக்ராக்

சீனாவுக்கு செல்லும்போது நிறுவனத்தின் மொபைல் போன்களை கொண்டு செல்ல தடை விதித்த அமெரிக்க நிறுவனம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 25, 2025
01:25 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க-சீனா பதட்டங்கள் மற்றும் தரவு இறையாண்மை குறித்த வளர்ந்து வரும் கவலைகளை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக, உலகளாவிய சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக்ராக் (BlackRock) சீனாவிற்கு பயணிக்கும் ஊழியர்களுக்கு கடுமையான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 16 முதல், சீனாவிற்கு வணிக மற்றும் தனிப்பட்ட பயணம் செய்யும் ஊழியர்கள், பயணத்தின்போது நிறுவனம் வழங்கிய சாதனங்கள் மற்றும் நெட்வொர்க் அணுகலைப் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. அதிகரித்த ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை மற்றும் செயல்பாட்டு ஆபத்து காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ப்ளூம்பெர்க் மற்றும் ராய்ட்டர்ஸ் மதிப்பாய்வு செய்த உள் குறிப்புகளின்படி, பிளாக்ராக் ஊழியர்கள் இனி சீனாவில் இருக்கும்போது நிறுவன ஐபோன்கள், மடிக்கணினிகளைப் பயன்படுத்தவோ அல்லது விபிஎன்கள் வழியாக நிறுவனத்தின் அமைப்புகளை அணுகவோ முடியாது.

மாற்று சாதனங்கள்

மாற்று சாதனங்களை கடனாக பெற்று பயன்படுத்த அறிவுறுத்தல்

அதற்கு பதிலாக, அவர்கள் தற்காலிகமாக சாதனங்களை கடனாக பெற்று பயன்படுத்தலாம் என்றும், அவர்கள் சீனாவில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் பிளாக்ராக்கின் நெட்வொர்க்குகளிலிருந்து துண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 10 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகிக்கும் இந்த நிறுவனம், இந்தக் கொள்கை குறித்து பகிரங்கமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த முடிவை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுவனத்திற்கும் வெளியிட்டுள்ள்ஸ் செய்திக்குறிப்பில் விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் சீனாவில் நடமாட்டக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட சமீபத்திய சம்பவங்களைத் தொடர்ந்து, பரந்த அளவிலான பெருநிறுவன எச்சரிக்கையின் மத்தியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.