பாட்டா இந்தியா நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கவிருக்கும் அடிடாஸ், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் பேச்சுவார்த்தை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உள்ள முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான பாட்டா இந்தியா (Bata India), ஜெர்மனியைச் சேர்ந்த அடிடாஸ் (Adidas) நிறுவனத்தின் இந்திய கைகோர்க்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் 2,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளையும், 9,800-க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் கொண்டிருக்கிறது பாட்டா இந்தியா. மேற்கூறிய இரு நிறுவனங்களின் கூட்டணியானது, இந்திய சந்தைக்கு மட்டுமானதாகவே இருக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
இந்த கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் இருக்கும் பாட்டாவின் சில்லறை வணிகக் கடைகளின் மூலம், இந்தியாவில் தங்களுடைய இருப்பைப் பரவலாக்கும் நோக்கத்துடனே இந்தக் கூட்டணியில் அடிடாஸ் இணையவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பாட்டாவுடன் கூட்டணி அமைக்கவிருக்கும் அடிடாஸ்:
#CNBCTV18Exclusive | #Bata India said to be in talks with @adidas for strategic partnership, likely to tie up with Adidas for the Indian market
— CNBC-TV18 (@CNBCTV18Live) August 17, 2023
Talks are likely at an advanced stage, final deal contours in the works
Sources say
Alert: CNBC-TV18 has reached out to Bata and… pic.twitter.com/F2h3cPvHw3